இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இன்று இரவு 8.30 மணிக்கு அவர் உரையாற்றவுள்ளதாக ஜனாபதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டை முடக்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம், நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலவரம், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று முற்பகல் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் நாட்டை இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.