July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

லாஃப் கேஸ் நிறுவனம் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனையை தீர்த்துள்ளதாகவும் லிட்ரோ கேஸ் சந்தைக்கு தேவையான எரிவாயுவை விநியோகித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சு சமீபத்தில் கூறியது.

இருப்பினும், நாட்டின் பல பகுதிகளில் இன்னும் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில எரிவாயு முகவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்களையே விற்பனைசெய்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.