
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாளைய தினம் வாக்கெடுப்பின்போது, 2/3 பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என, கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய விகாரைக்கு இன்று பகல் சென்றிருந்தனர்.
அங்கு எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட தேரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.