எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு இலங்கையிலிருந்து எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
எனினும், ஒருசில நாடுகள் அறிவிக்கின்ற தடுப்பூசியை போட்டுக் கொண்டு சென்றால் தனிமைப்படுத்தப்படாமல் நேரடியாக அந்த நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் மொத்த சனத்தொகையில் 43 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் காணப்பட்டாலும் சிலர் அதற்கு வருவதற்கு விரும்பாத காரணத்தினால் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் மரண எண்ணிக்கையை வரையறுப்பதே தங்களது பிரதான இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.