
இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் சுகாதாரம், ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை நடத்திச் செல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.