2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள் மாத்திரம் பணியாற்றுவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் செப்டம்பர் இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களில் 40 ஆயிரம் பேர் வரையிலானோர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.