January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 168 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 168 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, அவற்றை படகு ஒன்றில் கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டமனாறு கடற்பரப்பில் இன்று (20) அதிகாலை இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் சிலாவத்துறையைச் சேர்ந்த 20 மற்றும் 28 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய செம்பியன்பற்றைச் சேர்ந்த ஒருவருடைய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப் பொருளின் பெறுமதி 3.4 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.