January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (20) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவல் காரணமாக பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

“எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த செய்தியை நான் நாட்டுக்கு தெரிவிப்பேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.நான் மக்களுக்கு உண்மையாக இருந்தேன்.விலை உயர்வு குறித்து முன்கூட்டியே தெரிவித்தேன்.என்றும் அவர் தன்னுடைய ட்வீட்டரில் பதிவு செய்திருக்கிறார்.