ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றாவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உரை இடம்பெறும் நேர விபரங்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டை முடக்க நடவடிக்கையெடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாகவே ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாட்டை முடக்குமாறு சுகாதார துறையினரும், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கைகளை விடுத்து வரும் அதேவேளை, நேற்றைய தினத்தில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்தோரும் நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று இரவு வரையில் ஜனாதிபதி தலைமையில் கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ள நிலையில், அதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.