January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 186 பேர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 186 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இதனால் நாட்டின் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோல் புதிதாக 3,806 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இதன்மூலம் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,73,165 ஆக உயர்வடைந்துள்ளது.