ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் இடமாக மாறுமாக இருந்தால், அதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானுக்கு செல்வதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கான் நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் இலங்கை அரசாங்கம் தாலிபான்களின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாது, எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே தனது கருத்தாகும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘பாமியன்’ புத்தர் சிலையை அழித்த தாலிபான்களை ஏற்றுக்கொண்டால் இந்த வலயத்தில் இல்லாமல் செய்யப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கு உதவியளித்தை போல் ஆகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.