வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்றிலிருந்து அமுலாகும்படியாக வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை பயணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு வருபவர்களின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையானதாக அமைந்தால், தனிமைப்படுத்தல் இன்றி வீடு திரும்பலாம்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாமல் இலங்கைக்கு வருபவர்களின் பிசிஆர் பரிசோனை முடிவுகள் எதிர்மறையானதாக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.