பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மிகவும் சூட்சுமமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளை கொழும்பு சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
20 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த போதை மாத்திரைகள் தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதனைப் பெற்றுக்கொள்ள வந்த பெண் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தெஹிவளையை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணின் பெயருக்கே 4,048 போதை மாத்திரைகள் பொதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.