January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ள கல்கிசை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதற்கு கல்கிசை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அவசர விடயங்கள் தவிர்ந்த, ஏனைய நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

கொரோனா பரவல் அபாயம் காரணமாகவே அவர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த காலகட்டத்தில் உள்ள வழக்குகளை ஒத்திவைக்குமாறு மாவட்ட, நீதவான் மற்றும் சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்ற நீதவான்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டத்தரணிகள் அறை மற்றும் சிற்றுண்டிச் சாலை ஆகியவற்றையும் மூடிவிடுமாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.