இலங்கை இராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் 512 ஆவது படைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.