இலங்கையில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் கனவுடன் காத்திருக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தமக்கு ஆரம்பமாகக் கிடைக்கும் தடுப்பூசிகளைப் புறக்கணித்து வருவதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு தடுப்பூசி வகைகளையும் தெரிவு செய்வதில் தடுமாறாமல், கிடைக்கும் தடுப்பூசியை அவசரமாகப் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் தினு குருகே கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது மக்கள் மரணிப்பதைப் பார்க்கும் போது கவலையாக இருப்பதாகவும், தடுப்பூசி பெறுவதை ஒரு நாளேனும் பிற்போட வேண்டாம் என்று தொற்று நோயியல் நிபுணர் தினு குருகே கேட்டுக்கொண்டுள்ளார்.