July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை குறைந்தது மூன்று வாரங்களுக்காவது முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள் கூட்டாக ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அந்தக் கட்சிகளினால் கடிதம் ஒன்றின் மூலம் இவ்வாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அபே ஜன பலய கட்சியின் உறுப்பினர் அதுரலியே ரத்தின தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சி தலைவர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய மக்கள் கட்சி தலைவர் டிரான் அலஸ், ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீ.வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சி பிரதிநிதி அசங்க நவரட்ன, யுதுகம தேசிய அமைப்பு உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை, அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் நாட்டை முடக்க வேண்டியமைக்கான காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ள அவர்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.