இலங்கை ரயில்வே திணைக்களத்தின் 360 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் இதுவரையில் மூன்று ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்கள ஊழியர்களிடையே கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 5 கரையோர ரயில் நிலையங்கள் உட்பட 10 நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றைய தினம் மாகாணங்களுக்கு இடையே 82 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.