November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு பங்களாதேஷ் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குகிறது

அந்நிய செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ஆதரவளிக்கும் பங்களாதேஷின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பங்களாதேஷ் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

இந்த கடனுதவி பங்களாதேஷ் வங்கி (BB) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகஸ்ட் 3 ஆம் திகதி கையொப்பமிட்ட நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

ஒப்பந்தத்தின்படி பங்களாதேஷ் வங்கி மொத்தமாக இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குகிறது.

இலங்கையில் வேகமாக குறைந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் அதன் மாற்று விகிதத்தில் அழுத்தத்தை எளிதாக்குவதையும் இந்த கடன் தொகை நோக்காக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொகை மூன்று கட்டங்களாக வழங்கப்படுவதுடன், கடனின் முதல் தவணை (50 மில்லியன் டொலர்) இந்த வாரம் வழங்கப்படவுள்ளது.