அனைத்து அமைச்சுகளிலும் கொரோனா ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.
சூம் (Zoom) தொழில்நுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், பிரதான அதிகாரி ஒருவரின் கீழ் நிறுவன மட்டத்தில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதுடன், நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாகும் பட்சத்தில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதனைத் தவிர கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம், ஒவ்வொரு நிறுவனத்திலும் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலும் இந்த குழு கண்காணிக்கவுள்ளது.