ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேசத்தில் நீதியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆயர் சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவ்வித நீதியும் நிலைநாட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புள லிவேரா வெளிப்படுத்திய தகவல்கள் பொதுமக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஆயர் சிரில் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இலங்கையில் நீதியை நிலைநாட்டத் தவறுவது, சர்வதேசத்தின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி மற்றும் அமைதிக்கான வத்திகான் ஆணைக்குழு இவ்விடயத்தை கண்காணிப்பதாகவும் ஆயர் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.