June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்; பொலிஸாருக்கு தகவல் வழங்கியவருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நன்கொடை!

(Photo : Facebook/Sarath Weerasekera )

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவால் தலையில் சுடப்பட்ட முகமட் ரசிக் முகமட் தஸ்லிமுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவால் நன்கொடை வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு சந்தேக நபர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்காக இவ்வாறு 2.5 மில்லியன் ரூபாய் பணத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தஸ்லிம், டிசம்பர் 26, 2018 அன்று மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகளை சேதமாக்கிய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை  வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், மார்ச் 29, 2019 அன்று, மாவனல்லை தனாகமை  பகுதியில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தஸ்லிம் தலையில் சுடப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அவர் ஊனமுற்றுள்ளார்.