இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்துடன் மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 ஜுலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அங்கு நொத்தாரிசு ஒருவர் முன்னிலையில் அல்லாமல், ஆனாலும் சாட்சியாளர்கள் 5 பேர் முன்னிலையில் மாத்திரம் எழுதப்பட்டு ஒப்பமிடப்பட்ட இறுதி விருப்பு ஆவணத்தில் ஒப்பமிடும் போது இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதே குறித்த திருத்தங்களின் நோக்கமாகும்.
ஆனாலும் சாட்சியாளர்கள் 5 பேர் முன்னிலையில் இறுதி விருப்பு ஆவணம் எழுதப்பட்டு ஒப்பமிடுவதற்காக, மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமையவே, மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.