June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 27 மருத்துவர்களுக்கும், 105 தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர்கள், உள்ளடங்கலாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, 27 மருத்துவர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 600க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.