June 16, 2025 5:14:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கொவிட் தொற்று உறுதி!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னர் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினத்தில் வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.