கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான 3 இலட்சத்து 60 ஆயிரம் லீட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் 120,000 லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும் தற்போது தொற்றாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் மேலதிகமாக ஒட்சிசனைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கையில் நாளாந்தம் 78 டொன் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுவதுடன், தற்போது அதன் தேவை 95 டொன் ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.