முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கொவிட் தொற்றால் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சில தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்தச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான ரெஹான் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், இதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.