இலங்கைக்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்களையும், 80 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு தேவையான தடுப்பூசிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.