பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 117 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.