நாட்டை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நாட்டை முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டை மூடினால் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் முறையாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.