உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நாம் நெருக்கமான நாடாக இருந்தும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உதவிகள் குறைவாகும்.எனவே கொவிட் வைரஸ் நிலைமைகளை கையாள உலக சுகாதார ஸ்தாபனத்தை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் பல கொவிட் வைரஸ் பரவலில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இன்று ஆரோக்கியமான கட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாடு மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. மணித்தியாலத்திற்கு ஐந்து அல்லது ஆறு பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கமாக நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். மனநிலை, வாழ்வாதாரம்,பொருளாதாரம் என சகலதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.அதேபோல் ஜனாதிபதி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும்.
சகலரது கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு தேசிய பிரச்சினையாக இதனை கருத்தில் கொண்டு செயற்படுவது தற்போதுள்ள நிலையில் அவசியம் என கருதுகின்றேன். அதேபோல் உலக சசுகாதார ஸ்தாபனத்தின் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.