நாட்டில் மோசமான கொவிட் வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுகின்ற நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொவிட் கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து உடனடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமான வைரஸ் தொற்று பரவிக் கொண்டுள்ளது. இந்நிலையில் தனித்தனியாக விமர்சித்துக் கொண்டு இருக்காது, எமக்குள் மோதிக் கொண்டிருக்காது அரசியல் கட்சிகளுக்குள் இடையில் கொவிட் கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து சுகாதார அமைச்சருடன் இணைந்து செயற்பட்டால் ஆரோக்கியமானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரஸ் இப்போதே சமூக பரவலாகிவிட்டது.இதில் ஒவ்வொரு தனி நபரும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டால் மட்டுமே எம்மால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி ஏற்றுவது நல்ல வேலைத்திட்டமே. ஆனால் சகல தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற காரணத்தினால் சகலரும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.