November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைத்திய நிபுணர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்; அதுரலியே ரதன தேரர்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக வைத்திய அதிகாரிகளே இருக்க வேண்டும். அவர்களை கொண்டே நிலைமைகளை கையாள வேண்டுமென ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தாலும் வேதனையுடன் நான் ஒன்றை கூறுகின்றேன்.எந்தவித தார்மீக அடிப்படையும் இல்லாது அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.அமைச்சுக்கள் வெவ்வேறாக பங்கிடப்பட்டுள்ளது.அமைச்சருக்கு தீர்மானம் எடுக்க முடியாது. அமைச்சரவை மாற்றங்களை விடவும் முறையான அமைச்சரவை ஒன்றினை உருவாக்கிக் கொள்வதே இப்போது அவசியமாகும்.

அதேபோல் கொவிட் கட்டுப்பாட்டு குழுவில் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் பங்களிப்பு குறைவாகவே கிடைக்கின்றது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டும் மக்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளில் ஆயுர்வேத மூலிகைகளை வளர்க்க வேண்டும்.தேசிய ஒற்றுமையை இந்த விடயத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.