இலங்கையில் பிரபல இணையத்தளம் ஒன்று இணையத்தின் ஊடாக விறகு விற்று வருவதாகவும், இதுவரை 1000 க்கும் அதிகமான விறகு கட்டுகளை விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பெரும் அவதியுற்றுள்ள நிலையில், பலர் இணையத்தளங்களின் ஊடாக விறகு கட்டுகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இலங்கையின் பிரபல சில்லறை விற்பனையாளர் இணையத்தளமான கப்ருகா.கொம் நிறுவனர் மற்றும் தலைவர் துலித் ஹேரத் “நாங்கள் விறகுகளை இணையத்தில் விற்பனை செய்வோம் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. ஆனால் அது மிக வேகமாக விற்கப்படுகிறது,” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இணையத் தளத்தின்படி, 5 கிலோ நிறையுடைய இலவங்கப்பட்டை விறகு ஒரு கட்டு ரூ. 140, களிமண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் 5 கிலோ விறகு கட்டு ரூ. 390 க்கும் விற்கப்பட்டுள்ளது.