எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் செலவினங்களில் 18 சதவிகிதம் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
The reality is that we are in a foreign currency crisis. Fuel was 18% of our import bill in 1H of 2021. It may be around 25% in 2H. Please use fuel economically to save foreign currency for much needed medicine & vaccines.
— Udaya Gammanpila (@UPGammanpila) August 17, 2021
அத்தோடு அடுத்த ஆறு மாதங்களில் இந்த செலவீனம் 25 சதவீதமாக அதிகரிக்கலாம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.