பாராளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் 275 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட் பரிசோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எம்.பி.க்கள், அமைச்சர்கள், அவர்களது ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களும் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறினார்.
இந்த சோதனைகள் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தொற்றுறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களையும் பாதுகாப்பு கமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தவும், சம்பந்தப்பட்ட பகுதிகளை கிருமி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை குறைந்தபட்ச ஊழியர்களுடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.