July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

திருத்தங்களுடன் கூடிய கொரோனா தற்காலிக ஏற்பாடுகள் (2019) சட்டமூலம் இன்று (17) பிற்பகல் வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று (16) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது 20 க்கும் மேற்பட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இதற்கான பிரேரணையை ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்தார்.

கொவிட் தொற்று நோயை எதிர்கொள்ளும் போது நீதித் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இயல்பாக்குவதற்கும் இணையத்தின் ஊடாக நடத்தப்படுவதற்கும், பராமரிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கும் தேவையான சட்ட விதிகளை இந்த சட்டமூலம் வழங்கும் என்று நீதி அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

நிலவும் கொவிட் சூழலை கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை இன்றைய தினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.