
இலங்கை அரசாங்கம் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாச சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று மற்றும் அதன் மூலமான மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையுடன் சிறந்த நட்புறவுடன் செயற்படுவதாகவும், அரசாங்கம் அதன் மேலதிக உதவியை நாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைத் தொற்கடிப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்த பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.