July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் மூன்று வகையான டெல்டா திரிபுகள் அடையாளம்”

இலங்கையில் மூன்று வகையான டெல்டா திரிபுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் SA 222V, SA 701S மற்றும் SA 1078S போன்ற திரிபுகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸானது 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருவதாக விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இதனை தடுப்பதற்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டியது அவசிமாகும் என்று இராஜாங்க அமைச்சர் அதன்போது தெரிவித்துள்ளார்.