January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு கொரோனா தொற்று

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறாவது பாராளுமன்ற உறுப்பினராக இவர் கருதப்படுகிறார்.

நோய் அறிகுறிகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது மனைவி மற்றும் மகள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட போதே, தொற்று உறுதியாகியுள்ளது.

அவரது மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.