July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிபத்கொட தீ விபத்தில் சிக்கிய சிறுவர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கிரிபத்கொட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட- மாகோல வீதியில் உள்ள மூன்று மாடி விற்பனை நிலையம் ஒன்றின் கீழ் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக சிறுவர்கள் உட்பட 12 பேர் விற்பனை நிலையத்தினுள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சிக்கிக்கொண்டவர்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

தீ விபத்தின் புகை காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்ட ஐவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.