ஹொங்கொங் நாட்டின் கொரோனா பரவல் தொடர்பான சிவப்புப் பட்டியலில் இலங்கை உட்பட 15 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஹொங்கொங்கின் அதிக அபாயமுள்ள பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை இதற்கு முன்னர் ஹொங்கொங்கின் நடுநிலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியலிலேயே இருந்தது.
காம்போடியா, பங்களாதேஷ், பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்ஸர்லாந்து, தன்ஸானியா, தாய்லாந்து, துருக்கி, துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொங்கொங் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஹொங்கொங் முன்னணி வகிக்கிறது.