இலங்கையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்கு விதிகளை மீறிய 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 54,889 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கைது செய்ய மேல் மாகாணத்தில் 12 வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வீதித்தடைகளை தாண்டி பயணிப்பதற்கு முயற்சித்த 330 வாகனங்களில் வந்த 635 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.