File Photo
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக் குத்துக்கு உள்ளான நிலையில் அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரதேசவாசிகள் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.