ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போதைய கொவிட் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருக்கும் இடையே நேற்று இடம்பெற்றுள்ள தொலைபேசி உரையாடலை தொடர்ந்தே இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க குருநாகலுக்கு சென்றுள்ள நிலையில், அவர் கொழும்பு திரும்பியதும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.