January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், பேலியகொட மீன் சந்தையில் இன்று பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.