July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 167 கொவிட் தொற்றாளர்கள் மரணம்!

இலங்கையில் மேலும் 167 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களிடையே 103 ஆண்களும் 64 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,263 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3,414 பேர் இன்று (16) இனங் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,  நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 62,074 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 43,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 12,057 ஆக உயர்வடைந்துள்ளது.