இலங்கை முழுவதும் இன்று முதல் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தினமும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
இது தொடர்பான அறிவித்தல் நேற்று இரவு கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை நேற்று முதல் மக்கள் ஒன்றுகூடும் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாளை முதல் வீடுகள் மற்றும் மண்டபங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.