January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி எசல பெரஹரா: 30 ஆண்டுகளின் பின்னர் பத்திக் ஆடையுடன் யானைகள் ஊர்வலம்!

Photo: Facebook/dayasiri jayasekara

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவில் கலந்துகொண்ட யானைகளுக்கு பத்திக் ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளின் பின்னர் பெரஹராவில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு இவ்வாறு பத்திக் அடைகள் அணிவிக்கப்பட்டுள்ளதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற மூன்றாவது கும்பல் பெரஹராவில் இடம்பிடித்த சிங்க ராஜா யானையும், புருமா ராஜா மற்றும் கந்துல ஆகிய இரண்டு யானைகளும் இவ்வாறு பத்திக் ஆடை அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

யானையின் உடம்பு, தும்பிக்கை மற்றும் காதுகள் என்பன பத்திக் துணியால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அந்த யானைகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.