July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புக்கு செல்பவர்களுக்கு ரோஸி சேனாநாயக்க விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

கொழும்புக்கு வருகை தருவதை முடிந்தவரை குறைக்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,முடிந்தவரை மக்கள் தமது வீடுகளில் இருக்கும்படியும் தேவையான அத்தியாவசிய சேவைகளை இணையத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தற்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனைத்து தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு மேயர் ரோஸி சேனாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை வழங்கும்படி தெரிவித்துள்ள அவர், நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமது ஊழியர்களின் தொழில் வாய்ப்புக்கான உத்தரவாதத்தை முதலாளிமார் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்னர் எப்போதும் இல்லாத மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டினார்.

தற்காலிகமாக கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றியேனும், அனைவரும் பொறுப்புடன் மற்றும் சுயநலமின்றி நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.